Pages

Tuesday, December 24, 2019

ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த ராமபிரான்

ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த ராமபிரான்
ராமபிரான், பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு அருள்பாலித்த தலம்
வைத்தீஸ்வரன் கோவில். எனவே இங்கு ராமருக்கு தனியாக ஆலயம் ஒன்று
உள்ளது.

ஸ்ரீ விஜய கோதண்டராமன் ஆலயம் என்பது அதன் பெயர். அழகிய இந்த 
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பினுள் 
நுழைந்ததும் உள்ள மகா மண்டபத்தில் பீடம் இருக்க, அடுத்துள்ள 
கருவறையில் ஸ்ரீ ராமர், சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் அருள்பாலிக்
 கிறார். ராமரின் பாதத்தின் அருகே பக்த ஆஞ்சநேயரின் திருமேனி உள்ளது.

இங்கு ராமபிரான் ‘விஜய கோதண்டராமர்’ என்ற திருநாமத்துடன் அருள் 
புரிந்து வருகிறார். வழக்கமாக ராமரின் இடது புறம் காட்சி தரும் சீதாதேவி,
 இங்கு ராமரின் வலது புறம் காட்சி தருகிறார். ராமரின் இடது கரத்தில் 
கோதண்டம் காட்சி தருவதால், இவர் ‘கோதண்ட ராமர்’ என்ற திருநாமம் 
கொண்டுள்ளார்.

ஆலயப் பிரகாரத்தின் தென் திசையில் 13 அடி உயரத்தில் பிரமாண்டமாக 
வீற்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருமேனி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க 
வைக்கிறது. வண்ணக் கலவையில், சுதைச் சிற்பமாக உள்ள இந்த 
ஆஞ்சநேயரை தரிசிக்கும் போது, அவரது கருணை பொங்கும் கண்களை
 நாம் பார்த்து கொண்டே இருக்கலாம். ஆம், அந்த கண்களில் அவ்வளவு 
கருணை, சாந்தம் அழகு மிளிர்கிறது. மேற்கு திருச்சுற்றில் ஆதி 
ஆஞ்சநேயரின் திருமேனி உள்ளது.

சீதா தேவியை ராவணன் சிறை எடுத்து சென்றபோது, அவனை தடுத்து 
நிறுத்தி வானில் அவனுடன் போரிட்டார் ஜடாயு. அப்போது ஜடாயுவின் 
இறக்கையை வாள் கொண்டு வெட்டினான் ராவணன். அதில் பலத்த 
காயங்களுடன் உயிருக்கு போராடிய ஜடாயு, அங்கு வந்த ராமனிடம், 
ராவணன் சீதையை சிறை எடுத்துச் சென்ற விவரத்தை கூறிவிட்டு
 உயிர் நீத்தார். இதையடுத்து ராமபிரான், ஜடாயுவுக்கு இறுதிச்சடங்குகளைச் 
செய்து மோட்சம் அளித்தார். ஜடாயுவுக்கு வைத்தீஸ்வரன் கோவில் 
ஆலயத்தில் அருள்பாலிக்கும் வைத்தியனாத சுவாமியும் அருள்பாலித்தார்.

இன்றும் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியனாத சுவாமி ஆலயத்தின் 
தென் பாகத்தில் ஜடாயு சமாதி உள்ளது. அந்த இடத்தில் ஜடாயு குண்டம்
 ஒன்றில் விபூதி நிறைந்து உள்ளது. இங்கு ராமநவமி வெகுச் சிறப்பாக
 கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேக
 ஆராதனைகள் நடைபெறுகின்றன. அனுமன் ஜெயந்தி அன்று 
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 
ஏராளமான பக்தர்கள் அன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை 
மாலை சூட்டி தங்கள் பிரார்த்தனைகளை நிறைவு செய்கின்றனர்.

குழந்தை வரம் வேண்டியும், கல்வியில் உயர்நிலை வேண்டியும் பக்தர்கள் 
பிரார்த்தனை செய்கின்றனர். அந்த பிரார்த்தனை நிறைவேறியதும், 
ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, வடைமாலை சாத்தி, தேங்காய் 
பழங்களுடன் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு அந்தப் பிரசாதத்தைக் 
கொடுக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் இந்த ஆஞ்சநேயரை தரிசிக்க
 பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், 
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் 
செய்வதற்காக ஆலயம் திறந்திருக்கும்.

இங்கு தம்பதி சமேதராய் அருள்பாலிக்கும் ராமபிரான், தன்னை நாடும் 
பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பதுடன், அவர்களது குடும்பத்தில்
 ஒற்றுமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ அருள்புரிகிறார்.

அமைவிடம்
நாகை மாவட்டம் சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் உள்ள 
வைத்தீஸ்வரன் கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த 
ஆலயம் இருக்கிறது.

மல்லிகா சுந்தர்
source - dina thanthi

அனுமன் பெற்ற வரங்கள்

அனுமன் பெற்ற வரங்கள்


அனுமன் சிறுவனாக இருந்த போது, சூரியனை சுவையான பழம் என்று தவறாக
கருதினார். அதனால் அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று முயற்சி 
செய்தார்.
பதிவு: டிசம்பர் 24,  2019 18:01 PM
மண்ணில் இருந்து விண்ணை நோக்கிப் பறந்த அனுமன், சூரியனைப்
பிடித்து விழுங்க முயன்றார். அதே நேரத்தில் சூரியனைப் பிடிக்க ராகுவும்
வந்து கொண்டிருந்தது. அனுமனின் திடீர்ப் பாய்ச்சலைப் பார்த்து 
பயந்துபோன ராகு, தேவர் களின் தலைவனான
இந்திரனிடம் உதவி கோரினார். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனை
தாக்கினார். இதில், அனுமன் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயமே 
அனுமன்என்ற பெயருக்கு பின்னால் உள்ள காரணமாகும். ‘அனுமன்’ 
என்பதற்கு தாடை ஒடுங்கப்பெற்றவன்
என்று பொருள்.

தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டதை கண்டு வருந்திய வாயு பகவான்
அனுமனை தனது மடியில் கிடத்தியவாறு தனது
இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால்
அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டன. இதற்கு
தேவர்களும் கந்தர்வர்களும் கூட விதிவிலக்கல்ல. எனவே, அனைவரும் 
பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அவர் அனைவரையும் அழைத்து 
கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.

மயங்கி கிடந்த அனுமனை கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட 
பிரம்மா, தனது கரத்தால் தடவிக் கொடுக்கவும், அனுமன் எழுந்தார்.
பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, “இந்த சிறுவனால் தான்,
ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள
துன்பத்தை தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய
அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் 
திருப்தி அடைவார்என்று கூறினார்.

இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100ல் ஒரு பங்கை
அனுமனுக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள்
சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாக 
செய்வதாக ஒப்புக்கொண்டார்.

வருணன், “காற்றாலோ, நீராலோ அனுமனுக்கு மரணம் ஏற்படாதுஎன்றார்.

எமதர்மன், “எம தண்டத்தில் இருந்தும் நோய்களில் இருந்தும்
அனுமன் விலக்கு அளிக்கப்பட்டவன் ஆவான்என வரமருளினார்.

அனுமன் யுத்தத்தில் சோர்வே அடையமாட்டார் என்ற வரம் குபேரனிடம் 
இருந்து கிடைத்தது.

தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற் படாது” 
என்று சிவபெருமானும், “தான் இதுவரை செய்த ஆயுதங்களாலோ,
இனிமேல் செய்யும் ஆயுதங்களாலோ அனுமனுக்கு பாதிப்பு உண்டாகாது
என்று விஸ்வகர்மாவும் வரம் கொடுத்தனர்.

இறுதியாக பிரம்மதேவர், “அனுமன் சிரஞ்சீவியாக இருப்பான்.
அந்தணர் சாபம் அனுமனை ஒன்றும் செய்யாது. விரும்பிய வடிவம் 
எடுக்கவும், நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் செல்லவும் 
அனுமனால் முடியும். ஒருவரிடம் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ 
அனுமனுக்கு கிடையாதுஎன்று அருளினார். இதனால் வாயு பகவான்
மகிழ்ச்சி அடைந்து, தன்னுடைய இயக்கத்தைத் தொடங்கினார்.

source - dina thanthi

சனிதோஷ நிவர்த்தி தரும் அனுமன் வழிபாடு

சனிதோஷ நிவர்த்தி தரும் அனுமன் வழிபாடு

ராமாயணத்தில் இணையற்ற இடத்தை பிடித்தவர் அனுமன்.
அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம்,
வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே
அமையப்பெற்றவர். சீதாதேவியால், ’சிரஞ்சீவிபட்டம்
பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமேஅனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
பதிவு: டிசம்பர் 24,  2019 18:05 PM
திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகா விஷ்ணு எடுத்த அவதாரம் தான் ராம அவதாரம். அப்போது அவருக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான், அனுமனாக அவதாரம் செய்தார். ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ராமர். இந்த பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் வானர சேனைகளும் ஈடுபட்டிருந்தன. இதில், ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும், பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தனர். ராமர், லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாகுவதை பார்த்து அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருந்தனர்.

அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து, அவற்றின் மீது
ஜெய் ஸ்ரீராம்என்று செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ராமர் லட்சுமணனை வணங்கி, ‘‘பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னை தவறாக எண்ணாதீர்கள். என் கடமையை செய்ய அனுமதி தாருங்கள்என்று வேண்டினார்.

எங்கள் கடமையை நாங்கள் செய் கிறோம். அதுபோல் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனை பிடித்து பாருங்கள்என்றார் ராமர்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, “ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. உன்னை பிடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடுஎன்றார்.

சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க, நாங்கள் இலங்கை நோக்கி செல்ல இருக்கிறோம். அதற்காகத்தான்
இந்த சேதுபந்தன பணியை ராம சேவையாக ஏற்று தொண்டாற்றி கொண்டிருக்கிறோம். இந்த பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்.”

உடனடியாக சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் அமரலாம்?.” “ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளன. அதனால்,
அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் உங்களுக்கு
இடம் தந்தால், அது பெரும் தண்டனைக்குரியதாகும். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். எனவே, நீங்கள் என் தலை
மீது அமர்ந்து, தங்கள் கடமையைச் செய்யுங்கள்

அப்படிச் சொல்லிவிட்டு, அனுமன் தலை வணங்கி நின்றார்.
அவரின் தலை மீது ஏறி அமர்ந்துகொண்டார் சனீஸ்வரன்.
அதுவரை சிறிய சிறிய பாறைகளை தூக்கிவந்த அனுமன்,
சனீஸ்வரன் தன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப்பெரிய பாறைகளை பெயர்த்து எடுத்து தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி
நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனு மனுக்கு பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. ‘தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூட சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவரது தலையில் இருந்து கீழே குதித்தார்.

சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், “ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால், நானும் பாறைகளை சுமந்து, சேது பந்தனப்பணியில் ஈடுபட்டு புண்ணியம் பெற்றேன். பரமேஸ்வரனின் அம்சம்
தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பிடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்
என்றார் சனீஸ்வரன்.

‘‘இல்லை.. இல்லை.. இப்போதும் தாங்களே வென்றீர்கள்.
ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னை பிடித்துவிட்டீர்கள் அல்லவா?” என்றார் அனுமன்.

அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், “அனுமனே!
உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்பு
கிறேன். என்ன வேண்டும் கேள்என்றார்.

ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை, உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்என வரம் கேட்டார் அனுமன். சனி பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார்.

எனவே ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்.


விரதம் இருப்பது எப்படி?

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாத்தியும் வணங்கலாம். அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால்தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.

நாடி ஜோதிடர் பாஸ்கர்

source dina thanthi