Pages

Tuesday, January 29, 2019

service to GOD to alienate problems

கோவில்களே நமது சக்தி ஸ்தானங்கள்...
எத்தனையோ டாக்டர்கிட்ட பார்த்தும் நோய் சரியா போகலையா? இருக்கர கஷ்டத்திற்க்கு மேலே கஷ்டம் வருதா? அண்ணன் தம்பிக்குள்ள பிரச்சனையா? குழந்தைகள் படிக்க மாட்டீங்குதா? குழந்தையே பிறக்க மாட்டீங்குதா? பொண்ணாட்டி கூட பிரச்சனைனா? மனசே சரியில்லையா?... ஒன்னுமில்லை இதெல்லாத்திற்க்கும் நாமளேதான் காரணம்....
நல்லா விசாரிச்சு பார்த்தா...அவிங்க முன்னோர்கள் யாராவதுக்கு தீங்கு பண்ணீருப்பாங்க இல்லைன்னா கோவில் சொத்தை கொள்ளையடிச்சிருப்பான்..... பல பேர்களை நடைமுறையில்சந்திச்சுருக்கேன்..ஜாதக ரீதியாகவும் பார்த்திருக்கேன்....
இவிங்களுக்கு ஆகச்சிறந்த பரிகாரம் என்பது முன்னோர்கள் வழிபாடும் கோவில்களை புனரமைத்தலுமே ஆகும். இது இவர்களுக்கு உடனடியாக பலன் தரக்கூடியது....
உதாரணமாக ,
மனைவி/ குழந்தை பிரச்சனைக்கு, இறைவன் பள்ளியறை பூசைக்கு உதவுவதும் பள்ளியறை இல்லாத கோவில்களுக்கு பள்ளியறை அமைத்து குடுப்பதுவே சிறந்த பரிகாரம்.
தலையில் பிரச்சனைனையா மனதில் சஞ்சலமா...இறைவனுக்கு தாரா அபிஷேகத்திற்க்கு உதவுங்கள்.
தோல் வியாதியா, பசுமடத்தையும் கோவில்களையும் சுத்தம் செய்யுங்கள்.
வயிற்றில் பிரச்சனை ,ஜீரணக்கோளாறு , குடல்சம்பந்தமான பிரச்சனை, சாப்பிட முடியவில்லையா...மடப்பள்ளி இல்லாத கோவில்களுக்கு மடப்பள்ளி கட்டிதாருங்கள். இல்லையெனில் இடிந்த நிலையில் இருக்கும் மடப்பள்ளியை செப்பனிட்டு தாருங்கள்...
இறைவனுக்கு அங்கு பிரசாதம் சமைக்கப்பட்டு நைவேத்தியம் ஆகும் போது உங்கள் பிரச்சனையும் தீருவதை காணலாம்....
பொதுவா பணாக்காரங்களுக்கு எல்லா சொத்தும் இருந்தும் வாய்க்கு ருசியா சாப்பிட முடியாது.... அதனால் பகவானுக்கு மடபள்ளி அமைத்து தருவதால் உங்கள் பிரச்சனை சீக்கிரம் தீரும்.
இதனுடன் சில மருத்துவ ஆலோசனைகளும் கிடைக்கும்போது பலநாள் பட்ட பிரச்ச்னைகளும் தீரும் என்பது திண்ணம்.
அதனால் பழைய கோவில்களை தேடிச்செல்லுங்கள்...
அப்படி தேடி கிடைக்கவில்லையெனில் சொல்லுங்கள்...நாங்கள் தேடித்தருகிறோம்... நீங்கள் உங்கள் கையால் சென்று திருப்பணி செய்து சீக்கிரம் குணமடைந்து கொள்ளுங்கள்.
இதை அனைவருக்கு சென்றடைய பகிருங்கள்....
லைக் மட்டுமே வேண்டாம்...
மேலே சொன்ன விசயம் தர்மம் அல்ல விஷேச தர்மம் எனப்படும்...
தர்மத்திற்க்கும் விஷேச தர்மத்திற்க்கும் நிறைய வித்தியாசம் உண்டு... இது அகச்சிறந்த முறையில் உடனே பலன் தருவது... இதை பின்னாளில் சமயம் வரும்போது பதிகின்றோம்.
"கல்லால் திருப்பணி செய்தார் கைலையை விட்டு அகலார்தாமே " எனும் வாக்கிற்கிணங்க அனைவரும் திருப்பணி செய்து பயன்பெருங்கள்.
ராம ராம ராம

Friday, January 25, 2019

Birth star and its tamil meaning

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - தாங்கிப்பிடிப்பது

கிருத்திகை - வெட்டுவது

ரோகிணி - சிவப்பானது

மிருகசீரிஷம் - மான் தலை

திருவாதிரை - ஈரமானது

புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி

பூசம் - வளம் பெருக்குவது

ஆயில்யம் - தழுவிக்கொள்வது

மகம் - மகத்தானது

பூரம் - பாராட்டத்தகுந்தது

உத்திரம் - சிறப்பானது

ஹஸ்தம் - கை

சித்திரை - ஒளி வீசுவது

சுவாதி - சுதந்திரமானது

விசாகம் - பிளவுபட்டது

அனுசம் - வெற்றி

கேட்டை - மூத்தது

மூலம் - வேர்

பூராடம் - முந்தைய வெற்றி

உத்திராடம் - பிந்தைய வெற்றி

திருவோணம் - படிப்பறிவு உடையது

அவிட்டம் - பணக்காரன்

சதயம் - நூறு மருத்துவர்கள்

பூரட்டாதி - முன் மங்கள பாதம்

உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்

ரேவதி - செல்வம் மிகுந்தது.

source: daily thanthi 

Nalayira divya prabandham - compilation

தமிழ் மொழியில் திருமாலின் புகழை வாயார பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் 
என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடிய பாடல்களின் 
மொத்த எண்ணிக்கை 4 ஆயிரம் ஆகும். இந்த 4 ஆயிரம் பாடல்களின் 
தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் 
என்பதை இங்கே பார்க்கலாம்.

தொண்டரடிப் பொடியாழ்வார் - 55 பாசுரங்கள்

திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் - 1361 பாசுரங்கள்

குலசேகராழ்வார் - 105 பாசுரங்கள்

மதுரகவியாழ்வார் - 11 பாசுரங்கள்

ஆண்டாள்- 173 பாசுரங்கள்

பொய்கை ஆழ்வார் - 100 பாசுரங்கள்

பூதத்தாழ்வார் - 100 பாசுரங்கள்

பேயாழ்வார் - 100 பாசுரங்கள்

திருமழிசையாழ்வார் - 216 பாசுரங்கள்

பெரியாழ்வார் - 473 பாசுரங்கள்

நம்மாழ்வார் - 1296 பாசுரங்கள்

source daily thanthi

Graha and food

ஒவ்வொருவருக்கும் தினசரி தேவைகளில் அத்தியாவசியமானது உணவு. 
நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம்.
எந்த உணவை எந்தக் கிழமையில் சாப்பிட்டால் நல்லது என்பது பற்றி ஜோதிட ரீதியாக 
சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

* ஞாயிறு- (சூரியன்): கோதுமை அல்வா, கோதுமை பாயசம், கோதுமை சாதம், சப்பாத்தி, 
பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப், பரங்கிக்காய் சாம்பார்.

திங்கள் - (சந்திரன்): பால், பால்கோவா, பால் பாயசம், லஸ்ஸி, மோர், பச்சரிசி சாதம், 
முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பம், இட்லி, தேங்காய் சாதம், கல்கண்டு சாதம்,
 தயிர் சாதம்.

* செவ்வாய் - (அங்காரகன்): துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
 பீட்ரூட் அல்வா, பேரீச்சை பாயசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, 
ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை, மிளகாய் துவையல்.

* புதன் - (புதன்): கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாகற்காய் தொக்கு, 
முருங்கைக்காய் சூப், பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்தமல்லி சட்னி, 
வாழைப் பழம், கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

* வியாழன் - (குரு): சுக்கு காபி அல்லது கசாயம், சோளம் சூப், கடலைப்பருப்பு கூட்டு, 
கடலைப்பருப்பு வடை, தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல், சாத்துக்குடி, 
மாம்பழ ஜூஸ், பொங்கல், தயிர், எலுமிச்சை சாதம், மாதுளை, முந்திரி, திராட்சை,
 பேரீச்சை கலந்த தயிர் சாதம்.

* வெள்ளி - (சுக்ரன்): பால் இனிப்புகள், பால் பாயசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, 
வெண்ணெயில் செய்த பிஸ்கட், முலாம்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ், 
வாழைத்தண்டு ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, 
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், கோஸ் சாம்பார், பூண்டு ரசம், 
வாழைத்தண்டு பொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.

* சனி- (சனீஸ்வரன்): ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், 
உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம்,
 மிளகு ரசம், உளுந்து சாதம், புளியோதரை, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, நாவல் பழம், 
கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சை, பிஸ்தா கலவை.

இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் அடிப்படை பொருட்களை 
பார்த்தால், அவை எல்லாமே அந்தந்த கிரகங்களுக்கு உரிய தானியங்களே. 
இவற்றில் உங்கள் வசதிக்கு தக்கபடி ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்
 கொள்வது நல்லது.

source:thina thanthi

saptapadi importance

திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள். 
இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காக செய்தார்கள் என்று
 பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. வாழையடி வாழையாக நாம்
 இந்த சடங்கை செய்து வருகிறோம்.
மணமக்கள் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.
முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
இரண்டாம் அடி- ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
மூன்றாம் அடி- நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
நான்காவது அடி- சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
ஐந்தாவது அடி- லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.
ஆறாவது அடி- நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
ஏழாவது அடி- தர்மங்கள் நிலைக்க வேண்டும்

source: Thina thanthi
.

Friday, January 4, 2019

Benefits of praying to Lord Hanuman


Benefits when prayed to lord hanuman
அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. அனுமன் வழிபாட்டினால் அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடல் மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சைப்பழ மாலை, துளசி மாலை சாத்தி வழிபட்டால் மேன்மை பெறுவார்கள். வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நம் துன்பங்கள் அனைத்தும் வெப்பம் பட்ட வெண்ணெய் போல கரைந்து போகும் என்பது நம்பிக்கை.

source- dinathanthi  4.1.2019

abishekams done for lord hanuman

16 வகை அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் பெரிய ஆஞ்சநேயர் திருவுருவம் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து அனுமன் ஜெயந்தி அன்று சுசீந்திரம் வந்து இவரை வழிபடுகிறார்கள். அனுமன் ஜெயந்தி அன்று காலை ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெறும். மேலும் நல்லெண்ணெய், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச் சாறு, மாதுளை சாறு, எலுமிச்சை பழச்சாறு, களபம், கஸ்தூரி, மஞ்சள்தூள், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் என 16 வகையான ஷோடஷ அபிஷேகமும் நடத்தப்படும். பின்னர் கழுத்தளவு நிறையும் அளவுக்கு வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகமும் நடைபெறும்.

source: dina thanthi 4.1.2019

various malas garland for hanuman

அனுமனுக்கு அணிவிக்கப்படும் மாலைகள்

ராமரை பிரிந்த ஏக்கத்தில் இறக்கும் முடிவுக்கு சென்ற சீதாதேவி, ராம நாமம் கேட்டு நின்றார். அப்போது மரத்தில் இருந்து குதித்த அனுமன், தான் ராமனின் தூதுவன் என்று கூறி ராமர் கொடுத்த கணையாழியை கொடுத்தார். அதைப் பார்த்ததும் ராமரையே பார்த்தது போல் மகிழ்ந்த சீதாதேவி, அங்கிருந்து வெற்றிலை ஒன்றை பறித்து அனுமனின் தலைமீது போட்டு ஆசி வழங்கினார். இதனால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது.

வானரங்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிரியம். அதன் காரணமாக அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

ராமருக்கு (திருமால்) துளசி என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாத்துகின்றனர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்துவதைப் போன்றது என்ற எண்ணம் கொண்டவர் ராமர்.

போர்க்களத்தில் அனுமன் தன் வீரதீரத்தால், கொழுத்த அசுரர்களை அடித்து உதைத்து வடை போல் கையில் வைத்து தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு அதிகம் உள்ள உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி அதை அனுமனுக்கு சாத்துகிறார்கள். அசுரர்களை போல் தீயவற்றில் இருந்து தங்களையும் காத்தருள வேண்டும் என்றும் வடைமாலை சாற்றப்படுகிறது.