விரல்களின் பலன்கள்
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதி நெற்றிக்கண் என்ற புருவ மத்தி ஆகும். பிறரது தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அங்கு வைக்கப்படும் குங்குமம் மூலம் விரட்டப்படும் என்று ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குங்குமம் ‘ஹிப்னாட்டிஸம்’ போன்ற எதிர்மறை சக்திகளை தடுக்கும் விதமாக செயல் படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
* கட்டை விரலால் குங்குமம் இட்டு கொள்வது தைரியத்தை அளிக்கும்.
* குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரலால் குங்குமம் அணிவது தலைமை பண்பு, நிர்வாகம், ஆளுமை போன்ற திறன்களை வளர்க்கும்.
* சனி விரல் என்ற நடுவிரல் மூலம் குங்குமம் இடுவது தீர்க்கமான ஆயுளை அளிப்பதாக ஐதீகம்.
* மோதிர விரலால் குங்குமம் இடுவது துணிவு, நேர்மையுடன் செயல்படும் பண்பு ஆகியவற்றை அளிக்கும்.
* பெண்கள் குங்குமம் வைக்கும்போது, ‘ஸ்ரீயை நம’ அல்லது ‘மகாலட்சுமியே போற்றி’ என்று மனதிற்குள் சொல்வது பல நன்மைகளை அளிக்கும்.
* குங்குமம் வைத்த பின்னர் நெற்றியின் மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. அதனால், முக தசை களுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கிறது.
source: dinathanthi
No comments:
Post a Comment