Namaskaram - salutations

Namaskaram - salutations I dedicate my blog to the enormous art lovers across the globe I love knitting so much that I have started a blog for knitting.Knitting is a job that I will like to go on.Through knitting I breathe life into many people's life. It is knitting time. When I want to relax I do it with knitting. I am a knitting buff.I love to do knitting on various topics. There is no way that you can stop me doing knitting.I am born with a flare for knitting.My face brightens once I touch the knitting needs.The electronic media has helped knitting to travel across the world.Every stitch made will talk about how knitting has influenced people.I have done some and would like to share it with you. Some patterns have been taken from free knitting sites. Some designs have been created by me. Many a times I have modified the patterns to suite my requirements. Finally I can say that I breathe knitting, I talk knitting, I walk knitting - a total knitaholic

Thank You

Thanks for visiting my blog. Your appreciations are most welcome

My sweet buddies

Showing posts with label shiva temples. Show all posts
Showing posts with label shiva temples. Show all posts

Monday, July 18, 2022

Evidence Speaks, Ancient High Technology MYSTERIES DOCUMENTARY, Shiva Lo...

Wednesday, February 12, 2020

shiva temple - uttarakosaimangai

Kris Kesavan- source from FB

• உலகிலேயே சிவபெருமானுக்கு என்று முதலில் உருவாக்கப்பட்ட ஆலயம் உத்தர கோசமங்கை ஆலயம்.
• நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான கோயிலும் இதுதான்.
• நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட கோயிலும் இதுதான்.
• ஆயிரம் சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்ற ஆலயமும் இதுவேதான்.
• மூவாயிரம் ஆண்டுகளாக பூத்துக்குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயமும் இதுதான்.
• தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவாவதற்கு காரணமான இருந்த இடமும் இதுதான்.
• உலகிலேயே முதல் மரகத நடராஜர் சிலை நிறுவப்பட்ட ஆலயமும் இதுதான்.
இப்படி பல பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாக இருக்கும் ஆலயம் ஸ்ரீ ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோயில்.
இக்கோயிலைப் பற்றி நம் ஓம் நமச்சிவாயா குழுவிற்கு கிடைத்த சில சிறப்பு தகவல்கள் உங்களுக்காக :
• உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சிலை "சுயம்பு லிங்கம்" மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்படுகிறது.
• இக்கோயில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
• உத்தரகோசமங்கை என்னும் ஊரையே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் அழைக்கப்படுகிறது.
• இக்கோயிலில் உமாமகேஸ்வரர் சன்னதி முன்பு தம்பதியர் இணைந்து வழிபாடு செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
• திருவிளையாடல் புராணத்தில் வரும் "வழியில் மீன் பிடித்த படலம்" என்னும் வரியில் இத்தலத்தை தான் குறிப்பிட்டுள்ளனர்.
• இந்நகரம் சிறிதுகாலம் பாண்டிய மன்னரின் காலத்தில் அவர்களது தலைநகரமாக விளங்கியது.
• ஆரம்ப காலகட்டத்தில் சிவபுரம், தெட்சிண கயிலாயம் , சதுர்வேதி, மங்கலம் , இலந்திகைப்பள்ளி, பத்திரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்கிரபுரம் , மங்களபுரி ஆதிசிதம்பரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டதாக வரலாற்று புத்தகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
• இக்கோயில் மங்களநாதர் மங்களநாயகி இதுவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் அதற்கான முழுமையான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
• இங்குள்ள மூலவருக்கு மங்களநாதர் , மங்களேஸ்வரர் , காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவர் என்னும் பெயர்களும் உள்ளன.
• இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை , சுந்தரநாயகி போன்ற பல பெயர்களும் உள்ளன.
• இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. மண்டோதரி பிறந்த இடமும் இந்த உத்தரகோசமங்கை தான் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்த குறிப்பின் மூலம் இத்தலம் இராமாயணத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆசிரியர்களால் ஆராயப்படுகிறது.
• இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்.
• இக்கோயிலில் ஆதிகாலத்து வராகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
• பிரதோஷ நாளன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகிறார்கள். காரணம் இக்கோவில் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை கட்டி வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம் .
• இத்தலத்தில் உள்ள கோயில் குளத்தில் உள்ள மீன்கள் கடல் வாழ் மீன்களாகும்.
• சிவபெருமானால் பரதநாட்டியக் கலையை முதல்முதலாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடம் இத்தலம் ஆகும்.

Thursday, December 27, 2018

shiva temples in tamilnadu

இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில்
 பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள்
தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும்,
 தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு
லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க
சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில்
நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் முதல் தலமான இந்த
ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல், லிங்கமே மூலவராக
இருக்கிறது. அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன், மணல்
 லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார்.
 வெள்ளத்தில் லிங்கம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அம்மன்,
லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது.
 இப்போதும் இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கைத் தடம்
 இருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகள் பழமை
வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து நான்கு
வகையாக (வேதங்கள்) சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன.

பாஸ்கரேஸ்வரர் கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர்
திருக்கோவில். சிவபெருமானின் சன்னிதிக்கு எதிரில் நின்று சூரிய பகவான்
தரிசனம் செய்யும் கோலத்தை, இந்த ஆலயத்தைத் தவிர வேறு எங்கும்
காண முடியாது என்கிறார்கள். இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக
விளங்குகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள்,
சிம்ம லக்னம், சிம்ம ராசி, சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தின் முதல்
தேதியில் பிறந்தவர்கள், வளர்பிறையில் வரும் முதல்
ஞாயிற்றுக்கிழமையில்  இங்குள்ள சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டால்
தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நீண்டநாள் நோய் நீங்குமாம்.
 இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும்
கூறுகிறார்கள்.

புஷ்பவனேஸ்வரர் ஆலயம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின்
 தென்கரையில் அமைந்திருக்கிறது, புஷ்பவனேஸ்வரர் கோவில். இத்தல
இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசி
 நகரை விடவும், 16 மடங்கு புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது.
இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து, மோட்ச
 தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு எதிராக
உள்ள நந்தி சற்று விலகியிருப்பது தனிச் சிறப்பாகும். திருமணத் தடை விலக,
 குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல
இறைவனை வழிபடலாம். சரியாக பேச்சு வராதவர்களுக்காகவும், கலைகளில்
 சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்திக்காகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு
 பூஜைகள் செய்யப்படுகின்றன.

சதுரகிரி மலைக்கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவில்
 தான், சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு
மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில்
இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள
வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில்
இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. பழனி மலையில் வீற்றிருந்து
அருள்பாலிக்கும், நவபாஷண முருகனின் சிலையை, சதுரகிரி மலையில்
தங்கியிருந்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று
 சொல்லப்படுகிறது. இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய
பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மலை அருவி நீரும், மூலிகைகளும்
நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள்.

கும்பேஸ்வரர் திருத்தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில்.
இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், கீழே பருத்தும், மேல செல்லச் செல்ல
 ஊசி போன்ற வடிவிலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் கல் நாதஸ்வரம்
 உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா
இங்கு நடைபெறும் விழாக்களில் பிரசித்திப் பெற்றதாகும். புதியதாக தொழில்
தொடங்க நினைப்பவர்கள், குபேர வாழ்வு வேண்டுபவர்கள், இத்தலத்தில்
அருள்பாலிக்கும் மங்களநாயகி அம்மனுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில்
 செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டிய
பலன் கிடைக்கும்.

சோமஸ்வரர் திருக்கோவில்

கும்பகோணத்தில் இருந்து உடையாளூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர்
 தொலைவில் கீழ்ப்பழையறை என்ற ஊர் இருக்கிறது. இங்கு சோமகலாம்பிகை
சமேத சோமேஸ்வரர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோழ
மன்னர் களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய திருத்தலம் இதுவாகும்.
வடதளியில் மற்றொரு மதத்தவரால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை,
அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், உண்ணா நோன்பிருந்து மீட்ட
சிறப்புக்குரிய திருத்தலம். மங்கையர்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர்
சிவனடியார்களுக்கு அருள்பணி புரிந்த தலம் இது. இந்த ஆலய இறைவனை,
 சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனும், குரு பகவானும் பூசித்து பேறு
பெற்றுள்ளனர்.

திருமேனிநாதர் ஆலயம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ளது திருமேனிநாதர் திருக்கோவில்.
 இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்வதால், இந்த ஆலயத்தில்
வைத்து திருமணம் செய்து கொள்வது சிறப்புக்குரிய விஷயமாகும். மேலும்
திருமண வரம் கிடைக்கவும் இத்தல இறைவனை வழிபடலாம். பிரளய
காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்த இடம். இங்கு சிவபெருமானே,
‘கயிலாயத்தை விட சிறந்த இடம் இது’ என்று கருதி அருள்பாலிப்பதாக
சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவராத்திரி அன்று வில்வ இலையைக்
கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தலங்களிலும்
உள்ள சிவபெருமானை ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்த
பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு நிகரான தலங்கள் ஆறு
இருப்பதாகவும், அதில் ஒன்று இந்த ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார்.
சிவபெருமானின் 1008 நடனங்களையும் ஆடிய திருத்தலம் இது என்பதால், ‘
ஆதி சிதம்பரம்’ என்றும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. சிவபெருமானின்
64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோரமூர்த்தியாகும். இந்த ஆலயத்தின்
அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 21 தலைமுறைக்கான சாபத்தை
நீக்கும் வல்லமை இத்தல இறைவனுக்கு உண்டு. இங்குள்ள புதன் பகவானை
வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.
source dina thanthi tamil news paper பதிவு: டிசம்பர் 26,  2018 15:32 PM

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...