Magic with Needles. I have a pair of pointed needles and know how to use them with my fragile hands
Namaskaram - salutations
Namaskaram - salutations
I dedicate my blog to the enormous art lovers across the globe
I love knitting so much that I have started a blog for knitting.Knitting is a job that I will like to go on.Through knitting I breathe life into many people's life. It is knitting time. When I want to relax I do it with knitting. I am a knitting buff.I love to do knitting on various topics. There is no way that you can stop me doing knitting.I am born with a flare for knitting.My face brightens once I touch the knitting needs.The electronic media has helped knitting to travel across the world.Every stitch made will talk about how knitting has influenced people.I have done some and would like to share it with you. Some patterns have been taken from free knitting sites. Some designs have been created by me. Many a times I have modified the patterns to suite my requirements. Finally I can say that I breathe knitting, I talk knitting, I walk knitting - a total knitaholic
Thank You
Thanks for visiting my blog. Your appreciations are most welcome
Pages
My sweet buddies
Showing posts with label religion. Show all posts
Showing posts with label religion. Show all posts
Saturday, January 11, 2025
Tuesday, September 24, 2019
Madhu and kaitabha get destroyed
Madhu and Kaitabha get destroyed
Two demons called Madhu and kaitabha were born from the ears of Maha Vishnu,
when
he was fast asleep one day, on the milky ocean.
Because of their high-class birth from the Lord, they were arrogant and
atrocious in their
behaviour towards fellow creatures. They disturbed the sages in their
meditations,
attacked the devas and travelled everywhere troubling everyone.
When devas went to Brahma for help, he prayed to Lord Vinayaka and
became
invisible. Next devas complained to Lord Vishnu so that he can put an
end to
Madhu and Kaitabha.
When Maha Vishnu confronted Madhu and kaitabha, a fierce battle of
dreadful
weapons ensued. Boxing with muscle power and all other types of wars
also proved
futile. Finally Maha Vishnu made the demon go blind by his magic and
went to
Lord Shiva for a solution.
Lord Shiva advised Maha Vishnu to pray to Lord Vinayaka, as Vishnu had
failed to so
at the beginning .Lord Vinayaka was the only one who can ward off the
evils that crop
up during the battle and give Vishnu the super-power to win over the
enemies.
Vishnu followed Lord Shiva’s advice and then met the demons in a fierce
fight.
His bow sarangam and Arrows did not yield the desired results.
As a last resort, Vishnu prayed to Lord Vinayaka once again and hurled
his
Chakrayudha, at the enemies.
Madhu-Kaitabha fell a prey to Vishnu’s chakrayudha at last. Devas
greeted
Maha Vishnu and Brahma also came
out of his hiding to congratulate Lord
Vishnu on his great victory.
Sourse:Dr.Akila Sivaraman.
Tuesday, March 19, 2019
Fingers - importance while applying tilak-kumkum
விரல்களின் பலன்கள்
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதி நெற்றிக்கண் என்ற புருவ மத்தி ஆகும். பிறரது தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அங்கு வைக்கப்படும் குங்குமம் மூலம் விரட்டப்படும் என்று ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குங்குமம் ‘ஹிப்னாட்டிஸம்’ போன்ற எதிர்மறை சக்திகளை தடுக்கும் விதமாக செயல் படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
* கட்டை விரலால் குங்குமம் இட்டு கொள்வது தைரியத்தை அளிக்கும்.
* குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரலால் குங்குமம் அணிவது தலைமை பண்பு, நிர்வாகம், ஆளுமை போன்ற திறன்களை வளர்க்கும்.
* சனி விரல் என்ற நடுவிரல் மூலம் குங்குமம் இடுவது தீர்க்கமான ஆயுளை அளிப்பதாக ஐதீகம்.
* மோதிர விரலால் குங்குமம் இடுவது துணிவு, நேர்மையுடன் செயல்படும் பண்பு ஆகியவற்றை அளிக்கும்.
* பெண்கள் குங்குமம் வைக்கும்போது, ‘ஸ்ரீயை நம’ அல்லது ‘மகாலட்சுமியே போற்றி’ என்று மனதிற்குள் சொல்வது பல நன்மைகளை அளிக்கும்.
* குங்குமம் வைத்த பின்னர் நெற்றியின் மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. அதனால், முக தசை களுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கிறது.
source: dinathanthi
Friday, February 22, 2019
Ganesha - 16 names
Ganesha is prayed when we embark on a new project or when we start a puja.
reciting his 16 names will bring peace to our mind and energise our inner strength
reciting his 16 names will bring peace to our mind and energise our inner strength
16 NAMES OF LORD GANESHA FOR CHANTING
Om Sumukaya namaha
Om Ekadhanthaya namaha
Om Kapilaya namaha
Om Gaja Karnakaya namaha
Om Lambodharaya namaha
Om Lambodharaya namaha
Om Vikataya namaha
Om Vigneshwaraya namaha
Om Vignarajaya namaha
Om Ganadhithapathaye namaha
Om Dhoomakethave namaha
Om Dhoomakethave namaha
Om Ganadhyakshaya namaha
Om Balachandraya namaha
Om Gajananaya namaha
Om Vakrathundaya namaha
Om Vakrathundaya namaha
Om Soorpakarnaya namaha
Om Herambaya namaha
Om Skandapoorvajaya namaha
Om Ganapathi namaha
Om Maheswaraputhraya namah
May Ganesha fulfill all your desires and stay blessed
Tuesday, February 5, 2019
divya desam perumal at one place
ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப்
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப்
பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும்
தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.
108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில்
11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில்,
11 ஆலயங்களின் சுவாமிகளும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.
108 வைணவத் தலங்களில் திருநாங்கூரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன.
தவிர இந்த ஊரைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும்
5 திவ்ய தேசங்கள் இருக்கின்றன.
நாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள், அரிமேய வின்னகரம்
குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள்,
வண்புருடோத்தம பெருமாள், வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம்
அண்ணன் பெருமாள், திருமேனிக்கூடம் வரதராஜப் பெருமாள்,
கீழச்சாலை மாதவப்பெருமாள், பார்த்தன் பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள்,
திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய தலங்களே, அந்த 11 திவ்ய தேசங்கள் ஆகும்.
ஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாட்சர மந்திரமாக்கி,
அதை உபதேசம் செய்தார். அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே
மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி, தனக்கே உபதேசம் செய்து கொண்ட
அற்புதம் அந்த நிகழ்வு. அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும்
நானே நிறைந்திருக்கிறேன் என்பதை நாராயணர் உரைக்கிறார்.
பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி
தோஷம் பிடித்தது. அது நீங்க சிவபெருமானை கோகர்ணம் என்ற தலத்தில்
திருமாலை நோக்கி தவம் இருந்தார். அவர் முன்பாக தோன்றிய திருமால்,
சிவபெருமானை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று,
11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படி கூறினார்.
சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார். அதன் நிறைவு
சமயத்தில் நாராயணர், பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின்
தோஷத்தைப் போக்கினார். அதுவும் 11 ருத்ர தோற்றத்திற்கும்,
11 பெருமாள்களாக தோன்றி திருமால் காட்சி தந்தார். அப்படி பெருமாள் கொண்ட
11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன
என்பது தல வரலாறு.
திருநாங்கூர் மணிமாடக் கோவிலில், தை அமாவாசைக்கு மறுநாள்,
11 திவ்ய தேச பெருமாள்களும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள்,
ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம்
நடைபெறும். பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர்.
பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு,
கற்பூர ஆரத்தி காட்டப்படும்.
மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும்,
தங்களது கருட வாகனத்தில் தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது
என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும்
பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுகிறது.
source: thina thanthi
Tuesday, January 29, 2019
service to GOD to alienate problems
கோவில்களே நமது சக்தி ஸ்தானங்கள்...
எத்தனையோ டாக்டர்கிட்ட பார்த்தும் நோய் சரியா போகலையா? இருக்கர கஷ்டத்திற்க்கு மேலே கஷ்டம் வருதா? அண்ணன் தம்பிக்குள்ள பிரச்சனையா? குழந்தைகள் படிக்க மாட்டீங்குதா? குழந்தையே பிறக்க மாட்டீங்குதா? பொண்ணாட்டி கூட பிரச்சனைனா? மனசே சரியில்லையா?... ஒன்னுமில்லை இதெல்லாத்திற்க்கும் நாமளேதான் காரணம்....
நல்லா விசாரிச்சு பார்த்தா...அவிங்க முன்னோர்கள் யாராவதுக்கு தீங்கு பண்ணீருப்பாங்க இல்லைன்னா கோவில் சொத்தை கொள்ளையடிச்சிருப்பான்..... பல பேர்களை நடைமுறையில்சந்திச்சுருக்கேன்..ஜாதக ரீதியாகவும் பார்த்திருக்கேன்....
இவிங்களுக்கு ஆகச்சிறந்த பரிகாரம் என்பது முன்னோர்கள் வழிபாடும் கோவில்களை புனரமைத்தலுமே ஆகும். இது இவர்களுக்கு உடனடியாக பலன் தரக்கூடியது....
உதாரணமாக ,
மனைவி/ குழந்தை பிரச்சனைக்கு, இறைவன் பள்ளியறை பூசைக்கு உதவுவதும் பள்ளியறை இல்லாத கோவில்களுக்கு பள்ளியறை அமைத்து குடுப்பதுவே சிறந்த பரிகாரம்.
தலையில் பிரச்சனைனையா மனதில் சஞ்சலமா...இறைவனுக்கு தாரா அபிஷேகத்திற்க்கு உதவுங்கள்.
தோல் வியாதியா, பசுமடத்தையும் கோவில்களையும் சுத்தம் செய்யுங்கள்.
வயிற்றில் பிரச்சனை ,ஜீரணக்கோளாறு , குடல்சம்பந்தமான பிரச்சனை, சாப்பிட முடியவில்லையா...மடப்பள்ளி இல்லாத கோவில்களுக்கு மடப்பள்ளி கட்டிதாருங்கள். இல்லையெனில் இடிந்த நிலையில் இருக்கும் மடப்பள்ளியை செப்பனிட்டு தாருங்கள்...
இறைவனுக்கு அங்கு பிரசாதம் சமைக்கப்பட்டு நைவேத்தியம் ஆகும் போது உங்கள் பிரச்சனையும் தீருவதை காணலாம்....
பொதுவா பணாக்காரங்களுக்கு எல்லா சொத்தும் இருந்தும் வாய்க்கு ருசியா சாப்பிட முடியாது.... அதனால் பகவானுக்கு மடபள்ளி அமைத்து தருவதால் உங்கள் பிரச்சனை சீக்கிரம் தீரும்.
இதனுடன் சில மருத்துவ ஆலோசனைகளும் கிடைக்கும்போது பலநாள் பட்ட பிரச்ச்னைகளும் தீரும் என்பது திண்ணம்.
அதனால் பழைய கோவில்களை தேடிச்செல்லுங்கள்...
அப்படி தேடி கிடைக்கவில்லையெனில் சொல்லுங்கள்...நாங்கள் தேடித்தருகிறோம்... நீங்கள் உங்கள் கையால் சென்று திருப்பணி செய்து சீக்கிரம் குணமடைந்து கொள்ளுங்கள்.
இதை அனைவருக்கு சென்றடைய பகிருங்கள்....
லைக் மட்டுமே வேண்டாம்...
மேலே சொன்ன விசயம் தர்மம் அல்ல விஷேச தர்மம் எனப்படும்...
தர்மத்திற்க்கும் விஷேச தர்மத்திற்க்கும் நிறைய வித்தியாசம் உண்டு... இது அகச்சிறந்த முறையில் உடனே பலன் தருவது... இதை பின்னாளில் சமயம் வரும்போது பதிகின்றோம்.
"கல்லால் திருப்பணி செய்தார் கைலையை விட்டு அகலார்தாமே " எனும் வாக்கிற்கிணங்க அனைவரும் திருப்பணி செய்து பயன்பெருங்கள்.
ராம ராம ராம
Friday, January 25, 2019
Birth star and its tamil meaning
அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - தாங்கிப்பிடிப்பது
கிருத்திகை - வெட்டுவது
ரோகிணி - சிவப்பானது
மிருகசீரிஷம் - மான் தலை
திருவாதிரை - ஈரமானது
புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
பூசம் - வளம் பெருக்குவது
ஆயில்யம் - தழுவிக்கொள்வது
மகம் - மகத்தானது
பூரம் - பாராட்டத்தகுந்தது
உத்திரம் - சிறப்பானது
ஹஸ்தம் - கை
சித்திரை - ஒளி வீசுவது
சுவாதி - சுதந்திரமானது
விசாகம் - பிளவுபட்டது
அனுசம் - வெற்றி
கேட்டை - மூத்தது
மூலம் - வேர்
பூராடம் - முந்தைய வெற்றி
உத்திராடம் - பிந்தைய வெற்றி
திருவோணம் - படிப்பறிவு உடையது
அவிட்டம் - பணக்காரன்
சதயம் - நூறு மருத்துவர்கள்
பூரட்டாதி - முன் மங்கள பாதம்
உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
ரேவதி - செல்வம் மிகுந்தது.
source: daily thanthi
Nalayira divya prabandham - compilation
தமிழ் மொழியில் திருமாலின் புகழை வாயார பாடியவர்கள் 12 ஆழ்வார்கள்
என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடிய பாடல்களின்
மொத்த எண்ணிக்கை 4 ஆயிரம் ஆகும். இந்த 4 ஆயிரம் பாடல்களின்
தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள்
என்பதை இங்கே பார்க்கலாம்.
தொண்டரடிப் பொடியாழ்வார் - 55 பாசுரங்கள்
திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள்
திருமங்கையாழ்வார் - 1361 பாசுரங்கள்
குலசேகராழ்வார் - 105 பாசுரங்கள்
மதுரகவியாழ்வார் - 11 பாசுரங்கள்
ஆண்டாள்- 173 பாசுரங்கள்
பொய்கை ஆழ்வார் - 100 பாசுரங்கள்
பூதத்தாழ்வார் - 100 பாசுரங்கள்
பேயாழ்வார் - 100 பாசுரங்கள்
திருமழிசையாழ்வார் - 216 பாசுரங்கள்
பெரியாழ்வார் - 473 பாசுரங்கள்
நம்மாழ்வார் - 1296 பாசுரங்கள்
source daily thanthi
Graha and food
ஒவ்வொருவருக்கும் தினசரி தேவைகளில் அத்தியாவசியமானது உணவு.
நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம்.
எந்த உணவை எந்தக் கிழமையில் சாப்பிட்டால் நல்லது என்பது பற்றி ஜோதிட ரீதியாக
சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.
* ஞாயிறு- (சூரியன்): கோதுமை அல்வா, கோதுமை பாயசம், கோதுமை சாதம், சப்பாத்தி,
பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப், பரங்கிக்காய் சாம்பார்.
திங்கள் - (சந்திரன்): பால், பால்கோவா, பால் பாயசம், லஸ்ஸி, மோர், பச்சரிசி சாதம்,
முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பம், இட்லி, தேங்காய் சாதம், கல்கண்டு சாதம்,
தயிர் சாதம்.
* செவ்வாய் - (அங்காரகன்): துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரீச்சை பாயசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை,
ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை, மிளகாய் துவையல்.
* புதன் - (புதன்): கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாகற்காய் தொக்கு,
முருங்கைக்காய் சூப், பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்தமல்லி சட்னி,
வாழைப் பழம், கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.
* வியாழன் - (குரு): சுக்கு காபி அல்லது கசாயம், சோளம் சூப், கடலைப்பருப்பு கூட்டு,
கடலைப்பருப்பு வடை, தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல், சாத்துக்குடி,
மாம்பழ ஜூஸ், பொங்கல், தயிர், எலுமிச்சை சாதம், மாதுளை, முந்திரி, திராட்சை,
பேரீச்சை கலந்த தயிர் சாதம்.
* வெள்ளி - (சுக்ரன்): பால் இனிப்புகள், பால் பாயசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி,
வெண்ணெயில் செய்த பிஸ்கட், முலாம்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ்,
வாழைத்தண்டு ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,
வாழைத்தண்டு பொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.
* சனி- (சனீஸ்வரன்): ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல்,
உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம்,
மிளகு ரசம், உளுந்து சாதம், புளியோதரை, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, நாவல் பழம்,
கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சை, பிஸ்தா கலவை.
இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் அடிப்படை பொருட்களை
பார்த்தால், அவை எல்லாமே அந்தந்த கிரகங்களுக்கு உரிய தானியங்களே.
இவற்றில் உங்கள் வசதிக்கு தக்கபடி ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்
கொள்வது நல்லது.
source:thina thanthi
saptapadi importance
திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள்.
இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காக செய்தார்கள் என்று
பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. வாழையடி வாழையாக நாம்
இந்த சடங்கை செய்து வருகிறோம்.
இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காக செய்தார்கள் என்று
பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. வாழையடி வாழையாக நாம்
இந்த சடங்கை செய்து வருகிறோம்.
மணமக்கள் அக்னியை 7 முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.
முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
இரண்டாம் அடி- ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
மூன்றாம் அடி- நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
நான்காவது அடி- சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
ஐந்தாவது அடி- லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.
ஆறாவது அடி- நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
ஏழாவது அடி- தர்மங்கள் நிலைக்க வேண்டும்
source: Thina thanthi
.
.
Friday, January 4, 2019
Benefits of praying to Lord Hanuman
Benefits when prayed to lord hanuman
அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. அனுமன் வழிபாட்டினால் அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடல் மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சைப்பழ மாலை, துளசி மாலை சாத்தி வழிபட்டால் மேன்மை பெறுவார்கள். வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நம் துன்பங்கள் அனைத்தும் வெப்பம் பட்ட வெண்ணெய் போல கரைந்து போகும் என்பது நம்பிக்கை.
abishekams done for lord hanuman
16 வகை அபிஷேகம்
சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் பெரிய ஆஞ்சநேயர் திருவுருவம் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து அனுமன் ஜெயந்தி அன்று சுசீந்திரம் வந்து இவரை வழிபடுகிறார்கள். அனுமன் ஜெயந்தி அன்று காலை ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெறும். மேலும் நல்லெண்ணெய், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச் சாறு, மாதுளை சாறு, எலுமிச்சை பழச்சாறு, களபம், கஸ்தூரி, மஞ்சள்தூள், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் என 16 வகையான ஷோடஷ அபிஷேகமும் நடத்தப்படும். பின்னர் கழுத்தளவு நிறையும் அளவுக்கு வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகமும் நடைபெறும்.
source: dina thanthi 4.1.2019
various malas garland for hanuman
அனுமனுக்கு அணிவிக்கப்படும் மாலைகள்
ராமரை பிரிந்த ஏக்கத்தில் இறக்கும் முடிவுக்கு சென்ற சீதாதேவி, ராம நாமம் கேட்டு நின்றார். அப்போது மரத்தில் இருந்து குதித்த அனுமன், தான் ராமனின் தூதுவன் என்று கூறி ராமர் கொடுத்த கணையாழியை கொடுத்தார். அதைப் பார்த்ததும் ராமரையே பார்த்தது போல் மகிழ்ந்த சீதாதேவி, அங்கிருந்து வெற்றிலை ஒன்றை பறித்து அனுமனின் தலைமீது போட்டு ஆசி வழங்கினார். இதனால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது.
வானரங்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிரியம். அதன் காரணமாக அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
ராமருக்கு (திருமால்) துளசி என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாத்துகின்றனர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்துவதைப் போன்றது என்ற எண்ணம் கொண்டவர் ராமர்.
போர்க்களத்தில் அனுமன் தன் வீரதீரத்தால், கொழுத்த அசுரர்களை அடித்து உதைத்து வடை போல் கையில் வைத்து தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு அதிகம் உள்ள உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி அதை அனுமனுக்கு சாத்துகிறார்கள். அசுரர்களை போல் தீயவற்றில் இருந்து தங்களையும் காத்தருள வேண்டும் என்றும் வடைமாலை சாற்றப்படுகிறது.
Thursday, December 27, 2018
the importance of yuga in hindu dharma
மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து
சொல்கிறது புராணங்கள்
அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்
என்று நான்கு பிரிவாக உள்ளன.
சொல்கிறது புராணங்கள்
அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்
என்று நான்கு பிரிவாக உள்ளன.
கிருத யுகம்: இந்த யுகத்தில் மக்கள் அனைவரும்
அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக
21 அங்குலம் (924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும்,
சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்.
இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.
அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக
21 அங்குலம் (924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும்,
சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்.
இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.
திரேதா யுகம்: நான்கில் மூன்று பகுதி மக்கள்
அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும்
வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம்
(616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000
வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 12,96,000
வருடங்கள் கொண்டதாகும்.

துவாபர யுகம்: சரிபாதி மக்கள் அறநெறியுடனும்,
மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள்.
மனிதர்கள் சராசரியாக 7 அங்குலம்
(308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும்,
1000 வருடமும் வாழ்வார்கள்.
இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.
மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள்.
மனிதர்கள் சராசரியாக 7 அங்குலம்
(308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும்,
1000 வருடமும் வாழ்வார்கள்.
இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.
கலியுகம்: நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும்,
மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள்.
மனிதர்கள் சராசரியாக 3.5 அங்குலம் (154 செ.மீ.)
உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும்
வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்களைக்
கொண்டதாகும்.
மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள்.
மனிதர்கள் சராசரியாக 3.5 அங்குலம் (154 செ.மீ.)
உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும்
வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்களைக்
கொண்டதாகும்.
இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு ‘மகா யுகம்’
அல்லது ‘சதுா்யுகம்.’ 12 மகா யுகங்களைக் கொண்டது,
ஒரு மனுவந்தரம். 14 மனுவந்தரங்களைக்
கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள்
இருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருப்பது
2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.

மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால
அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது
12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின்
ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம்,
தேவர்களின் ஒரு வருடமாகும்.
அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது
12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின்
ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம்,
தேவர்களின் ஒரு வருடமாகும்.
12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம்.
அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள்.
ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது
என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை நான்கு யுகங்களாக
பிரிக்கலாம்.ஒவ்வொரு யுகத்திற்கான தேவ வருடத்தையும்,
மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.

கிருத யுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 4,800 தேவ வருடம்.
திரேதா யுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 3,600 தேவ வருடம்.
துவாபர யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 2,400 தேவ வருடம்.
கலி யுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 1,200 தேவ வருடம்.
மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம்
அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். இப்படி 71 மகா யுகங்கள்
கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர்.
மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. இப்போது நாம்
இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.
அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். இப்படி 71 மகா யுகங்கள்
கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர்.
மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. இப்போது நாம்
இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.
சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப்
பார்ப்போம். ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின்
ஒரு பகலை மட்டும் குறிக்கும். பிரம்மனின் இரவு
காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது.
எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின்
ஒரு நாள் ஆகும். எனினும் பகலுக்கு சமமான இரவும்
பிரம்மனுக்கு உண்டு. பிரம்மனின் கல்ப காலத்தில்
14 மனுவந்தரங்கள் அடங்கும். ஒவ்வொரு
மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம்,
14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள்.
(இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே.
ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன்
இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை
காலம் இருக்கும்.இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”.
இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம்
அடங்கியது ஆகும். அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம்
மனித வருடங்கள். இதே போல் 14 மனுவந்தரத்திற்கு
பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும்.
அதுவே பிரம்மனின் இரவு ஆகும். பிரம்மனின்
ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள்
மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித
ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.

ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர்
யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம்
என்றும் கூறுவர். இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம்
ஆகும். பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள். ஒரு பிரம்மனின்
ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன்
நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார். தற்போதைய பிரம்மனின்
ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள். அதாவது தற்போது பிரம்மனின்
வயது 51. பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர,
இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கியுள்ளது.

அதுவரை யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது கலியுகம் நடந்து
கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும்.
அடுத்து திரேதா யுகம், துவார யுகம், மீண்டும் கலியுகம் என்று பிரம்மனின்
ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.
source- dinathanthi
கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும்.
அடுத்து திரேதா யுகம், துவார யுகம், மீண்டும் கலியுகம் என்று பிரம்மனின்
ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.
source- dinathanthi
shiva temples in tamilnadu
இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில்
பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள்
தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும்,
தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு
லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க
சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில்
நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் முதல் தலமான இந்த
ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல், லிங்கமே மூலவராக
இருக்கிறது. அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன், மணல்
லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார்.
வெள்ளத்தில் லிங்கம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அம்மன்,
லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது.
இப்போதும் இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கைத் தடம்
இருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகள் பழமை
வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து நான்கு
வகையாக (வேதங்கள்) சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன.

பாஸ்கரேஸ்வரர் கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர்
திருக்கோவில். சிவபெருமானின் சன்னிதிக்கு எதிரில் நின்று சூரிய பகவான்
தரிசனம் செய்யும் கோலத்தை, இந்த ஆலயத்தைத் தவிர வேறு எங்கும்
காண முடியாது என்கிறார்கள். இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக
விளங்குகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள்,
சிம்ம லக்னம், சிம்ம ராசி, சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தின் முதல்
தேதியில் பிறந்தவர்கள், வளர்பிறையில் வரும் முதல்
ஞாயிற்றுக்கிழமையில் இங்குள்ள சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டால்
தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நீண்டநாள் நோய் நீங்குமாம்.
இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும்
கூறுகிறார்கள்.

புஷ்பவனேஸ்வரர் ஆலயம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின்
தென்கரையில் அமைந்திருக்கிறது, புஷ்பவனேஸ்வரர் கோவில். இத்தல
இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசி
நகரை விடவும், 16 மடங்கு புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது.
இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து, மோட்ச
தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு எதிராக
உள்ள நந்தி சற்று விலகியிருப்பது தனிச் சிறப்பாகும். திருமணத் தடை விலக,
குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல
இறைவனை வழிபடலாம். சரியாக பேச்சு வராதவர்களுக்காகவும், கலைகளில்
சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்திக்காகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு
பூஜைகள் செய்யப்படுகின்றன.

சதுரகிரி மலைக்கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவில்
தான், சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு
மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில்
இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள
வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில்
இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. பழனி மலையில் வீற்றிருந்து
அருள்பாலிக்கும், நவபாஷண முருகனின் சிலையை, சதுரகிரி மலையில்
தங்கியிருந்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று
சொல்லப்படுகிறது. இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய
பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மலை அருவி நீரும், மூலிகைகளும்
நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள்.

கும்பேஸ்வரர் திருத்தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில்.
இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், கீழே பருத்தும், மேல செல்லச் செல்ல
ஊசி போன்ற வடிவிலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் கல் நாதஸ்வரம்
உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா
இங்கு நடைபெறும் விழாக்களில் பிரசித்திப் பெற்றதாகும். புதியதாக தொழில்
தொடங்க நினைப்பவர்கள், குபேர வாழ்வு வேண்டுபவர்கள், இத்தலத்தில்
அருள்பாலிக்கும் மங்களநாயகி அம்மனுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில்
செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டிய
பலன் கிடைக்கும்.

சோமஸ்வரர் திருக்கோவில்
கும்பகோணத்தில் இருந்து உடையாளூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர்
தொலைவில் கீழ்ப்பழையறை என்ற ஊர் இருக்கிறது. இங்கு சோமகலாம்பிகை
சமேத சோமேஸ்வரர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோழ
மன்னர் களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய திருத்தலம் இதுவாகும்.
வடதளியில் மற்றொரு மதத்தவரால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை,
அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், உண்ணா நோன்பிருந்து மீட்ட
சிறப்புக்குரிய திருத்தலம். மங்கையர்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர்
சிவனடியார்களுக்கு அருள்பணி புரிந்த தலம் இது. இந்த ஆலய இறைவனை,
சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனும், குரு பகவானும் பூசித்து பேறு
பெற்றுள்ளனர்.

திருமேனிநாதர் ஆலயம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ளது திருமேனிநாதர் திருக்கோவில்.
இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்வதால், இந்த ஆலயத்தில்
வைத்து திருமணம் செய்து கொள்வது சிறப்புக்குரிய விஷயமாகும். மேலும்
திருமண வரம் கிடைக்கவும் இத்தல இறைவனை வழிபடலாம். பிரளய
காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்த இடம். இங்கு சிவபெருமானே,
‘கயிலாயத்தை விட சிறந்த இடம் இது’ என்று கருதி அருள்பாலிப்பதாக
சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவராத்திரி அன்று வில்வ இலையைக்
கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தலங்களிலும்
உள்ள சிவபெருமானை ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்த
பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு நிகரான தலங்கள் ஆறு
இருப்பதாகவும், அதில் ஒன்று இந்த ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார்.
சிவபெருமானின் 1008 நடனங்களையும் ஆடிய திருத்தலம் இது என்பதால், ‘
ஆதி சிதம்பரம்’ என்றும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. சிவபெருமானின்
64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோரமூர்த்தியாகும். இந்த ஆலயத்தின்
அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 21 தலைமுறைக்கான சாபத்தை
நீக்கும் வல்லமை இத்தல இறைவனுக்கு உண்டு. இங்குள்ள புதன் பகவானை
வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.

source dina thanthi tamil news paper பதிவு: டிசம்பர் 26, 2018 15:32 PM
Subscribe to:
Comments (Atom)